Skip to main content

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த வழக்கு!

biopic of narendra modi

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தடையை நீட்டிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.

இந்நிலையில் மூத்த துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா கூறுகையில், "மோடியின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த தேர்தல் ஆணையத்தின் கருத்து குறித்தும், அப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்தும், ஒரு சீல் வைக்கப்பட்ட கவரில் இன்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்" என தெரிவித்தார்.

narendra modi biopic

இதற்கான உத்தரவை கடந்த திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் வழங்கியது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு, தேர்தல் ஆணையம் வழங்கும் அறிக்கையை பரிசீலனை செய்து ஏப்ரல் 22-ம் தேதியில் இந்த வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Election Commission to submit report on PM Modi's biopic to SC

narendra modi biopic
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.