Skip to main content

பிரதமர் மோடி கேதர்நாத் பயணம்!

பிரதமர் மோடி கேதர்நாத் பயணம்

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல், நாளை மே 19 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலை முடிவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி தனது கடைசி தேர்தல் பிரச்சாரத்தை மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் நகரில் மேற்கொண்டார்.

இந்நிலையில் பிரச்சாரம் முடிந்த கையுடன் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) 18-ம் தேதி கேதர்நாத் கோயிலுக்கு செல்கிறார்.

நாளை 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பத்ரிநாத் கோயிலுக்கும் செல்கிறார். அங்கு நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார்.  

kedarnath

தியான குகைக்கும் செல்கிறார். தொடர்ந்து கோயில் வளர்ச்சி பணிகள் குறித்தும் யோசனைகள் தெரிவிக்கவுள்ளார்.

கேதார்புரி மறு சீரமைப்பு திட்டத்தை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி கேதர்நாத்துக்கு இதுவரை 3 முறை சென்றுள்ளார். பிரதமர் ஆன பின்னர் 2017 மே மாதம் இங்கு முதன் முதலாக சென்றார். 2017 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்திலும், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதமும் இங்கு சென்றுள்ளார்.

narendra modi

தற்போது இந்த பயணம் 4 வது முறை ஆகும். கேதர்நாத் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார்.

கேதார்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

PM Narendra Modi visit Kedarnath Shrine for the 4 th time and will visit Badrinath Too.

 

kedarnath
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.