Skip to main content

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸின் திருமண ஏற்பாடு நிகழ்வுகள் !!

பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ்

பிரியங்கா சோப்ரா கடந்த நவம்பர் 22 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை தன் வருங்கால கணவர் நிக் ஜோனஸை டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு வரவேற்றார். நிக் டெல்லியில் வந்து இறங்கிய போது, அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அப்போது பிரியங்கா, ஷோனலி போஸின் தி ஸ்கை இஸ் பிங்க் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார்.

இவர்கள் இருவரின் இந்த நெருக்கப் புகைப்படங்கள், இணையதளத்தில் புயல் வேகத்தில் பரவி ரசிகர்களிடமிருந்து ஏராளமான பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. எனினும், ஒரு கருத்து நிக்கின் தாய் டெனிஸ் மில்லர்-ஜோனஸின் கருத்து அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருந்தது.

 

nick jonas priyanka

 

முழு இதயத்தோடும் நன்றி என அவர் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து, ஒரு இதய ஈமோஜியும் இருந்தது. இதற்கிடையில், நிக் இதய ஈமோஜியுடன் அதற்கு கருத்து தெரிவித்திருந்தார்.

பிரியங்காவும் நிக்கும் அவர்களது குடும்பத்தாருடன் நேற்று இரவு ஒரு நன்றி விருந்தை அனுபவித்தனர். அப்போது, பிரியங்கா ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார், அதில் அவர் தனது வருங்கால கணவருடன் கைகளை கோர்த்திருந்தார். அதில் "மகிழ்ச்சியான குடும்பத்திற்காக நன்றி எப்போதும் .." என்று அவர் தலைப்பிட்டிருந்தார்.

 

Priyanga chopra

 

பிரியங்கா மற்றும் நிக் ஆகியோர் தங்கள் திருமணத்தைப் பற்றி இறுக்கமாகப் பேசியிருந்தாலும், ஜோத்பூரில் உள்ள நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் ஏற்கனவே திருமணம் முடிந்ததாக வதந்திகள் பரவியது. ஆனால், திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் நவம்பர் 29 அன்று தான் தொடங்குகிறது.

பிரியங்கா மற்றும் நிக் இருவரும் ஒருவருக்கொருவர் பழக்க வழக்கங்களை மதிக்கும் விதமாக, இரண்டு வெவ்வேறு திருமண சடங்குகளில் மணம் புரிய உள்ளனர். டிசம்பர் 2 ஆம் தேதி இந்து சடங்குகளின்படியும் மற்றும் டிசம்பர் 3 ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்ய உள்ளனர்.

Priyanka Chopra shares cosy photo with Nick Jonas. Nick's mother Denise Miller-Jonas left a comment

on that photos.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.