Skip to main content

பிப்ரவரி 26 ஆம் தேதி அயோத்தி வழக்கு விசாரணை - உச்ச நீதிமன்றம்

அயோத்தி வழக்கு விசாரணை

பிப்ரவரி 26-ம் தேதி அயோத்தி வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறும் என இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று (February 20) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, என்.வி. ரமணா, டி.ஒய். சந்திராசூட், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த  அயோத்தி நில விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், அரசியல் சாசன அமர்வு விசாரணை வரும் ஜனவரி 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. 

5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ. பாப்தே 29 ஆம் தேதி வரமுடியாத சூழலில் இருப்பதால், விசாரணை ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த மேல்முறையீட்டு மனுக்களை இந்த அமர்வு ஜனவரி 10-ஆம் தேதி விசாரிக்கும் எனவும் தெரிவித்திருந்தது.

இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை இம்மாதம் 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ள இருந்தது.

ஆனால், அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் சமூக மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதல்வர் கல்யாண் சிங் சார்பில்  நீதிமன்றத்தில் வழக்குரைஞராக யு.யு.லலித் வாதாடியுள்ளார்.

அவர்தான் தற்போது 5 நீதிபதி கொண்ட அமர்வில் நீதிபதியாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யு.யு.லலித் அறிவித்தார்.

சமீபத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் யூ.யு. லலித் பதிலாக புதிய நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய நிலம் 

பாபர் மசூதி 1992, டிசம்பர் 6-ம்தேதி இடிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே தற்போது பிரச்னை எழுந்திருக்கும் 2.7 ஏக்கர் நிலத்தில் வில்லங்கம் இருந்து வந்தது.

2010-ம் ஆண்டின்போது தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் பிரச்னைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான் என்றும் அதன் 3-ல் 2 பங்கு இடத்தை இந்துக்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. மீதமுள்ள இடம் சன்னி சென்ட்ரல் வக்ப் வாரியத்திற்கு சென்று விடும். இருப்பினும் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2011 செப்டம்பரில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் மேல் முறையீடு செய்தன.

அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகிய உத்தர பிரதேச அரசு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. அவசர சட்டம் நிறைவேற்றி அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகளும், பாஜகவில் ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

வலதுசாரி அமைப்புகள், சிவசேனா உள்ளிட்டவை நெருக்கடி கொடுத்தாலும், சட்ட ரீதியில் அயோத்தி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அயோத்தி பிரச்னைக்கு வெகு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் வலதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. தாமதமான நீதி அநீதிக்கு சமம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாபர் மசூதி கடந்த 1992 டிசம்பர் 6-ம்தேதி வலதுசாரி அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த கலவரங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 26-ம் தேதி அயோத்தி வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறும் என இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று (February 20) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Supreme Court to hear Ayodhya title suits appeals on February 26

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.