Skip to main content

பிளிப்கார்ட் விநியோக மையத்திலிருந்து 150 மொபைல்கள் திருட்டு!

பிளிப்கார்ட்

ஆன்லைன் வணிக நிறுவனமான பிளிப்கார்ட்டின் அலிப்பூர் விநியோக மையத்திலிருந்து 150 மொபைல்களை திருடியதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 

"பிப்ரவரி 19 ஆம் தேதி பிளிப்கார்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு குழுவின் சான்றிதழ் பெற்ற கண்காணிப்பு நிபுணர் மான் சிங்கிடம் இருந்து திருட்டு புகார் பெறப்பட்டது. அதில் அலிப்பூர் பிளிப்கார்ட் விநியோக மையத்திலிருந்து பினோலா மற்றும் பிலாஸ்பூரில் உள்ள ஒரு கிடங்கிற்கு வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது", என காவல்துறை கூடுதல் ஆணையர் (குற்றவியல்) ராஜீவ் ரஞ்சன் கூறினார்.

இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது மற்றும் விசாரணை நடத்தப்பட்டது.

கும்பல் தலைவர் சந்தோஷ் குமார் உட்பட 4 பேர் அடங்கிய குழு கைது செய்யப்பட்டது. அவர்களிடம் 30 க்கும் மேற்பட்ட புதிய மொபைல் போன் மற்றும் மொபைல் சாதனங்கள் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார், பிரிஜ்மோகன், அகிலேஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் டெல்லியில் பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களுடன் பணிபுரியும் வாகன ஓட்டுனர்கள் ஆவர்.

சந்தோஷ் குமார் மற்றும் பிரிஜ்மோகன் ஆகியோர், உத்தர பிரதேசத்தில் உள்ள ஃபர்ஸத்கஞ்ச் காவல் நிலையத்தில் இதேபோன்ற ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், அவர்கள் 100 சர்க்கரை சாக்குகளை திருடியுள்ளனர் என்பது குற்றம்.

திருடப்பட்ட 30 கைப்பேசிகள் 2.5 லட்சம் மதிப்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

Four arrested for stealing 150 mobiles from Flipkart's delivery hub

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.