Skip to main content

"பி.எம். நரேந்திர மோடி" படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

narendra modi biopic

நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமான "பி.எம். நரேந்திர மோடி" வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வெளியாகிறது.

சுரேஷ் ஓபராய் மற்றும் சந்திப் எஸ் சிங் ஆகியோரின் தயாரிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்காலம் மற்றும் அரசியலில் அவர் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை விவரிக்கும் வர்த்தகரீதியான வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ் உள்பட 23 மொழிகளில் தயாராகியுள்ளது.

narendra modi biopic

இந்தப் படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் "பி.எம். நரேந்திர மோடி" படத்தை திரையிட கூடாது என மும்பை, டெல்லி மற்றும் அலகாபாத் உயர்நீதி மன்றங்களில் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். 

இதேபோல், தலைமை தேர்தல் ஆணையரிடமும் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. 

இந்நிலையில், பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு தடை கோரிய பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

Delhi High Court dismisses PIL seeking stay on release of the film ‘PM Narendra Modi’

vivek
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.