Skip to main content

பெத்தாய் புயல் எதிரொலி - விசாகப்பட்டினம் கட்டுப்பாட்டு ரயில்கள் ரத்து!!

விசாகப்பட்டினம் கட்டுப்பாட்டு ரயில்கள்

இன்று டிசம்பர் 17 ஆம் தேதி பிற்பகல் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் கரையைக் கடக்கவிருக்கும் பெத்தாய் புயல் காரணமாக பல விசாகப்பட்டினம் கட்டுப்பாட்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜென்மபூமி, ரத்னாலால் மற்றும் சிம்ஹத்ரி விரைவு ரயில்கள் இன்று இரு திசைகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில்கள்

67243 காக்கிநாடா - விசாகப்பட்டினம் பயணிகள் ரயில், 57225 விஜயவாடா - விசாகப்பட்டினம் பயணிகள் ரயில், 57226 விசாகப்பட்டினம் - விஜயவாடா பயணிகள் ரயில், 67295 ராஜமுந்திரி - விசாகப்பட்டினம் பயணிகள் ரயில், 67247 ராஜமுந்திரி -விசாகப்பட்டினம் பயணிகள் ரயில், மற்றும் 67296 விசாகப்பட்டினம் - ராஜமுந்திரி பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் 12805/06, விசாகப்பட்டினம் - செகந்திராபாத் - விசாகப்பட்டினம், ஜென்மபூமி விரைவுரயிலும் டிசம்பர் 17 ஆம் தேதி விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், விஜயவாடா மற்றும் செகந்திராபாத் இடையே இயக்கப்படும்.

உதவித் தொடர்பு எண்கள்

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில், பயணிகள் அணுகும் விதமாக ஒரு உதவி செல் திறக்கப்பட்டு, பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே : 83003, 83004, 83005 மற்றும் 83006 

பிஎஸ்என்எல் தொலைபேசி : 0891-2746619, 0891-2746330, 0891-2746344.

மொபைல் எண்: ஏர்டெல் - 8106053051 மற்றும் 8106053052 பிஎஸ்என்எல் - 8500041670 மற்றும் 8500041671.

A number of Vishakapatanam bound trains have been cancelled due to Cyclone Phethai on Dec 17.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.