Skip to main content

"பேட்ட" படத்தின் 'மரண மாஸ்' பாடல் வெளியானது!!!

"பேட்ட" படத்தின் 'மரண மாஸ்' பாடல் வெளியானது!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நேற்று திங்கட்கிழமையன்று "பேட்ட" திரைப்படத்தின் ரஜினியின் அறிமுக பாடலான "மரண மாஸ்" தனிப்பாடல் மாலையில் வெளியானது. 

ரஜினியின் ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார். ‘மரண மாஸ்’ பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.

ஷங்கரின் ‘2.0' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் கார்த்திக் சுப்புராஜின் "பேட்ட" மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என 2 படங்கள் உள்ளன.

‘ராக்ஸ்டார்' அனிருத் இசையமைக்கும் இதற்கு, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், ஷபீர், இயக்குநர்கள் சசிகுமார் - மகேந்திரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் மற்றும் 5 போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ‘மரண மாஸ்' பாடலின் மேக்கிங் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் பெயர் காளி. முன்னதாக ரஜினியின் நடிப்பில் சசி இயக்கத்தில் காளி (1980) திரைப்படத்திலும், முள்ளும் மலரும் (1979) திரைப்படத்திலும் அவரது பெயர் காளி.

Petta song Marana Mass: Anirudh’s tribute to Rajinikanth will make you hit the dance floor

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.