Skip to main content

பெரம்பலூர், காஞ்சிபுரம் உட்பட நான்கு தொகுதிகளில் இருந்து வெளியேறியது மக்கள் நீதி மய்யம்!

மக்கள் நீதி மய்யம்!

வேட்பு மனு தாக்கல் மற்றும் பரிசீலனை என ஆரம்பக் கட்டத்திலேயே 4 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 39 மக்களவைத் தொகுதிகள், மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்த தேர்தல் மூலம் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் வாக்கு சதவீதத்தை அறியலாம் என கமல் கணக்கு போட்டு வைத்திருந்தார்.

makkal needhi mayyam

 

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான மார்ச் 26-ல் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமார் தாமதமாக வந்ததால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

வேட்பு மனு பரிசீலனையின் போது காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியான இந்தியக் குடியரசுக் கட்சி வேட்பாளர் தங்கராஜ் வேட்பு மனு உரிய ஆவணம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. 

kamal hassan

 

மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி

மானாமதுரை சட்டப் பேரவை தொகுதியில் முன்மொழிவோர் கையெழுத்து இல்லாததால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராமகிருஷ்ணனின் மனு நிராகரிக்கப்பட்டது.

அரூர் சட்டப்பேரவை தொகுதி

அரூர் தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குப்புச்சாமியின் மனு நிராகரிக்கப்பட்டது.

2 மக்களவை, 2 சட்டப் பேரவை தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் போட்டியிட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. 

Makkal Needhi Mayyam is out of Election in 4 constituencies.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.