Skip to main content

பெண்களை பகடை காயாக பயன்படுத்திய திருநாவுக்கரசு !

 திருநாவுக்கரசு !

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு குறித்து பல அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பொள்ளாச்சி முழுவதும் சுமார் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு வியாபாரிகள், பொதுமக்களிடம் அதிக வட்டிக்கு கந்துவட்டி கொடுத்துள்ளது அம்பலம்.

அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், இது தொடர்பான பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்.

பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி தராத பெண்களை மிரட்டி பாலியல் இச்சைக்கு ஈடுபடுதல், மிரட்டுதல் போன்ற சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சென்னை மருத்துவர், கோவை பேராசிரியர், மருத்துவரின் மனைவி என பல பெண்களை மிரட்டி இதுவரை 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

sexual abuse
வசந்தகுமார் (27), சதீஷ் (28), சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25)

கடந்த செவ்வாயன்று மார்ச் 12 ஆம் தேதி இந்த பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். 

இதனிடையே, இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு நாட்களாக திருச்சி, கோவை, திருவண்ணாமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மார்ச் 14 ஆம் தேதி காலையில் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Pollachi Sex Scam main accuse Thirunavukarasu used ladies for his income.

pollachi

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.