Skip to main content

பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படும் - அதிமுக!

 rajya sabha election in tamilnadu

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படும் என்று கூறியது போல அந்தக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவரும் இன்று அறிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிட்டது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. தருமபுரியில் இருந்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார்.

போட்டியிட்ட தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர், மத்திய சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகிய ஏழு இடங்களிலும் பாமக தோல்வியைத் தழுவியது. 

tamilnadu assembly

இதை உறுதி செய்யும் வகையில் பாமகவுக்கு தேர்தலின்போது ஒப்புக் கொண்டது போல் ஒரு மாநிலங்களவை ஒதுக்கித் தரப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வமும் வெளியிட்டுள்ளனர். 

ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தின் 6 மாநிலக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

எனவே காலியாகும் அந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PMK Will be Given RajyaSabha Seat - ADMK

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.