Skip to main content

பாமகாவிற்கு பச்சை கொடி காட்டும் அதிமுக!

pmk chief ramadass

தேர்தல் கூட்டணிக்கு பா.ம.க அதிமுகவுடன் பேச்சு நடத்துகிறதா என்கிற கேள்விக்கு பதில் அளித்த அவர், “கூட்டணிக்காக எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது. திமுக, அமமுக தவிர யாரும் கூட்டணிக்கு வரலாம். அவர்கள் அனைவரும் வருக வருக" என்றார்.

மேலும், ஏழை, நடுத்தர மக்கள் பயனளிக்கும் வகையில் தமிழக பட்ஜெட் இருக்கும் என்றார்.

ஸ்டாலின் விமரசனத்திற்கு பதில்:

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் விமரசனத்திற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "ஸ்டாலினின் கருத்து தமிழகத்தை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும்" என்று கூறினார்.

தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவதை எதிர்ப்பது ஏன்?

குக்கர் சின்னம் தினகரனுக்கு வழங்க கூடாது என அதிமுக எதிர்ப்பதற்கான காரணம், "அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு பொதுவான சின்னத்தை சட்டப்படி ஒதுக்க இயலாது" என்பதற்காகவே என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து: 

"உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் சரிசெய்யப்படும்" என்று கூறிய அவர் அதிமுக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயராக இருப்பதாக கூறினார்.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முழுமையாக முடிந்த பின் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என்று கூறிய ஜெயக்குமார். பாஜக உடன் கூட்டணி அமைக்க எந்த நிர்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திமுக தவிர பாமக உட்பட யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.

Jayakumar welcomes PMK party to coailition with ADMK in upcominh Loksabha Polls.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.