Skip to main content

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய ஆசிரியர் & 3 காஷ்மீர் மாணவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய ஆசிரியர் உட்பட 3 காஷ்மீர் மாணவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

புல்வாமாவில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
 

புல்வாமாவில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது

இந்த சூழலில் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், சவுந்தட்டி அருகே இருக்கும் கடாபி சிவப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை தனது வாட்ஸ் அப்பில் (Whatsapp) தெரிவித்துள்ளார்.

இது சிலருக்கு அனுப்பப்பட்டு, வைரலாகப் பரவியுள்ளது. இதையறிந்த சிலர் ஆசிரியையின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து, ஆசிரியை வசித்து வந்த வீட்டுக்கு தீயிட்டுக் கொளுத்த முயற்சித்தனர்.

இந்தத் தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆசிரியையின் வீட்டைக் கொளுத்த முயன்றவர்களையும், சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்ட ஆசிரியையும் கைது செய்தனர்.

இது குறித்து பெலகாவி மாவட்ட  காவல்துறை எஸ்.பி. சுதீர் ரெட்டி கூறுகையில், "பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அந்த ஆசிரியையின் பதிவு குறித்து மாலை 5 மணி அளவில் அறிந்தோம்.

அடுத்த சில மணிநேரத்தில் அந்த ஆசிரியை கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியை வீட்டை சிலர் தீயிட்டுக் கொளுத்த முயன்றனர். அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த ஆசிரியை மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரிவு 124,124ஏ ஆகிய பிரிவுகளின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் " எனத் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து கைது செய்யப்பட்ட 2-வது நபர் இந்த ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் புல்வாமா தாக்குதலை நியாயப்படுத்தி மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

pulwama terrorist attack on crpf

தெற்கு காஷ்மீர் மாநிலத்தின் அவந்திபோராவில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் உள்ள சுமார் 2500 க்கும் மேற்பட்ட காவற்துறையினர் விடுமுறை முடிந்து, பணிக்கும் திரும்புவதற்காக 78 பேருந்துகளில் சென்றுகொண்டிருந்த போது, சுமார் 300 மற்றும் 350 கி.கி (660-770 லக்) வெடிகுண்டுகள் கொண்ட ஒரு கார் இந்த ரிசர்வ் படை வாகனத்தின் மீது மோதச்செய்து இந்த சம்பவத்தை தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.15 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்பு 

இந்த சம்பவத்திற்கு ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

புல்வாமாவிலுள்ள ககபோராவிலிருந்து அடில் அஹ்மத் என்ற பயங்கரவாதியை காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.

Pulwama terror attack aftermath: Three Kashmiri students and a Andhra Teacher held on charges of sedition

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.