Skip to main content

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் நகரில் குண்டு வெடிப்பு: 16 பேர் உயிரிழப்பு!

bombblast in pakistan

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் நகரில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 16 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் குவட்டா நகரப் பகுதியில் உள்ள ஹசர்கன்ச் என்ற இடத்தில் காய்கறி மார்க்கெட் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும்  இந்த மார்க்கெட்டில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

bombblast in pakistan

 இந்த தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர். பலியானவர்களில் 7 பேர் அங்குள்ள ஹசரா இனத்தை சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர்  தெரிவித்தனர்.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

மார்க்கெட் அருகே இருந்த கட்டிடம் ஒன்று வெடிகுண்டு வெடித்ததில் சேதம் அடைந்தது. குண்டு வெடிப்பில் காயம் அடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

bombblast in pakistan

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதி முழுவதும் மனித ரத்தம் மற்றும் சதைதுண்டுகளால் சூழப்பட்டுள்ளது.

16 Killed, 30 Injured In Bomb Blast At Pakistan Market

bombblast in pakistan

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.