Skip to main content

பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தடுக்காவிட்டால் சார்க்கில் பங்கேற்க கூடாது - சுஷ்மா

சுஷ்மா ஸ்வராஜ்

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் விலக்கும் வரை எந்தவிதமான பேச்சுவார்த்தைகளுக்கும் இடமில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.
 

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை, பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்திருக்கும் அழைப்பிற்கு மறுப்பு தெரிவித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கார்த்தார்பார் நகரில் குருத்வார் தர்பார் சாஹிபிற்கு செல்வதற்கு இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா இல்லாத பயணத்தை பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசு வழங்கி வருவதை எண்ணி தான் மகிழ்வதாகவும் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

அதற்காக இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று மட்டும் அர்த்தம் இல்லை என்றும், பயங்கரவாதத்துடன் கூடிய பேச்சுவார்த்தைகள் ஒன்றாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, சார்க் உச்சிமாநாட்டிற்காக பாகிஸ்தானுக்கு அழைக்கப்படுவார் என்று வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார்.

2016 சார்க் மாநாட்டை இஸ்லாமாபாத்தில் தான் நடத்த வேண்டும். ஆனால் செப்டம்பர் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாகவும், மேலும் இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள் காரணமாகவும் இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்க இயலாமையை வெளிப்படுத்தி உள்ளது.

பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இஸ்லாமாபாத் சந்திப்பில் பங்கேற்க மறுத்துவிட்டதால் உச்சி மாநாடு நிறுத்தப்பட்டது. மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் முன்முயற்சியின் ஏழாவது மற்றும் எட்டாவது உறுப்பு நாடுகளாகும்.

டிசம்பர் 7 ஆம் தேதி தெலுங்கானா தேர்தல் பிரச்சாரம் செய்த சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான், இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தியவுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படலாம். ஆனால் பேச்சுவார்த்தை கர்த்தார்பூர் நடைபாதையை பற்றியது மட்டும் இல்லை என்று கூறினார்.

There will be no dialogue with Pakistan unless it desists from terrorist activities against India - 

EAM Sushma Swaraj.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.