Skip to main content

பாஜகவின் இமாலய வெற்றி - மோடி 2.0!

மக்களவை தேர்தல்

2019 மக்களவை தேர்தலில் பாஜக 351 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஒன்றாக வளர்வோம், ஒன்றாக வளர்ச்சி பெறுவோம், ஒன்றிணைந்து வலிமை மிக்க இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும்வெற்றி பெற்றுள்ளது'' என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள அனைத்து நாடாளுமன்றத்தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

narendra modi

இதுவரை பாஜக 345 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் 89 தொகுதிகளில் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பிற காட்சிகள் 91 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

narendra modi

மீண்டும் ஆட்சி அமைப்பது தொடர்பாக வரும் 26-ம்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் மோடி. 

இதனால் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 

இரண்டாம் முறையாக ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழக நிலவரம் 

தமிழகத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதியை தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 23 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

ஆளுங்கட்சியான அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

38 தொகுதிகளில் ஆளுங்கட்சி 1 தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றிருப்பது அதிமுக மீதுள்ள மக்களின் வெறுப்பை காட்டுகிறது.

dmk

இதற்கு அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்ததே காரணம் என யூகிக்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளில் (சிவகங்கை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம்) ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

நாடுமுழுவதும் வெற்றிபெற்ற போதிலும் பாஜகவினால் தமிழகம், ஆந்திரா புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் வெற்றிபெற முடியவில்லை.

இடைத்தேர்தல்!

அதேவேளையில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது. அதிமுக 9 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 

BJP led NDA set to form new govt at Centre

stalin

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.