Skip to main content

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

நவம்பர் 8 ஆம் தேதி பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் 91 வது பிறந்த நாளில், இந்திய நாட்டின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு பெருமளவில் உள்ளது என்று 
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

1927 ஆம் ஆண்டு தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் பிறந்த அத்வானி இன்று அவரது 91 வயதில் அடியெடுத்து வைக்கிறார்.  

"இந்தியாவின் வளர்ச்சியில் அத்வானியின் பங்களிப்பு மிக முக்கியமானது. எதிர்காலத்திற்கான முடிவெடுக்கும் மற்றும் மக்கள் நட்புறவு கொள்கைகளுக்கு அவரது அமைச்சர் பதவிகள் பாராட்டப்பட்டது. அவரது ஞானம் அரசியல் முழுவதும் பாராட்டப்படுகிறது" என்று பிரதமர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

இந்திய அரசியலில் பாஜக கட்சியின் மூத்த தலைவரான அத்வானியின் தாக்கங்கள் மகத்தானவை என்றும் மோடி கூறினார்.

"தன்னலமற்ற மற்றும் விடாமுயற்சியுடன், அவர் இந்தியாவிற்கான பாஜகவை  கட்டியெழுப்பினார் என்றும், கட்சி தொழிலாளர்களை பிரமாதமாக வழிநடத்தினார்" என்றும் மோடி தனது மற்றொரு ட்விட்டர் பதிவில் கூறினார்.

Modi greets Advani on his birthday

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.