Skip to main content

ஒட்டப்பிடாரம் தொகுதியில் துணை முதல்வர் வாக்கு சேகரிப்பு!

ops election campaign

வரும் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பளார்களை ஆதரித்து அதிமுக மற்றும் திமுக காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும், சூலூர் எம்எல்ஏ வின் திடீர் மரணம் காரணமாகவும் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை.

ops

இந்நிலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவர் காலனி, கோரப்பள்ளம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் திரு மோகன் அவர்களை ஆதரித்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு 7 ஆம் கட்ட மக்களவை தேர்தலுடன் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அறிவித்தது.

மேற்கண்ட நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ops byelection campaign

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.