Skip to main content

ஒடிஷாவின் ஆற்றுப்பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலி !!!

பேருந்து  விபத்து

கடந்த நவம்பர் 20 ஆம் தேதி மாலை ஒடிஷாவின் ஜகத்பூர் பகுதியின் அருகே மகாநதி ஆற்றுப்பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 49 பேர் காயமடைந்தனர்.

தனியார் பேருந்து, தாதாரிலிருந்து கட்டாக்கிற்கு செல்லும் வழியில், மகாநதி ஆற்றுப்பாலத்தின் மீது பேருந்து மோதி 30 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்குக்கு கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மகாநதி ஆற்றுப் பாலத்தில் இருந்து விழுந்தது.

ஆற்றுப்பாலத்தின் நடுவே மாடு ஒன்று குறுக்கே வந்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்ததாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்.

ஒடிஷா நகர காவல்துறையினர் , தீயணைப்பு படையினர் மற்றும் ஒடிஷா பேரிடர் விரைவு அதிரடி படையினரும் விபத்தில் தப்பிய பயணிகளை காப்பாற்றுவதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மருத்துவமனையின் அதிகாரி, பி.என். மகாராணா கூறுகையில், இதுவரை 12 உடல்கள் மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும், இறந்தவர்களில் ஒன்பது பேர் ஆண்கள் மற்றும் மூன்று பேர் பெண்கள் எனவும், மேலும் காயமடைந்த நாற்பத்தொன்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து முதல்வர் நவீன் பட்நாயக் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்ததோடு, மாநில சுகாதார அமைச்சர் பிரதாப் ஜெனாவை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு சரியான சிகிச்சையை வழங்குவதை உறுதிப்படுத்தவும் கூறினார்.

இறந்தவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். மேலும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Bus falls into Mahanadhi river bed from the bridge on Odisha - 12 died and 49 got injured.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.