Skip to main content

ஒடிசா மாநிலத்தின் பூரி அருகே கரையை கடந்தது "ஃபானி" !

 Fani makes landfall in Odisha's Puri

ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் - சந்தபாலி இடையே உள்ள பூரி அருகே ஃபானி புயல் கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபானி புயல் கரையை கடக்கத் துவங்கிய நிலையில் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

8 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய ஃபானி புயலின் தாக்கம் காலை 11 மணி வரை இருக்கும்.

fani cyclone

பூரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பூரி நகருக்கு தென்மேற்கு பகுதியில் இருந்த ஃபானி புயல் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் நகர்கிறது.

புயல் காரணமாக ஒடிசாவில் கனமழையுடன், அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது.

தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Cyclone Fani makes landfall in Odisha's Puri

fani cyclone

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.