Skip to main content

ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பெங்களூரு!

csk vs RCB

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான பார்திவ் பட்டேல் பொறுப்புடன் விளையாடி 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

சென்னை அணி சார்பில் தீபக் சாஹர், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தாஹிர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

csk vs rcb

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

பெங்களூரு அணியினர் துல்லியமாக பந்து வீசினர். வாட்சன், டு பிளசிஸ் ஆகியோர் 5 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் 17 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 3 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தது.

அடுத்து இறங்கிய அம்பதி ராயுடுவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. ராயுடு 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய கேதார் ஜாதவ் 9 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 11 ரன்னிலும் வெளியேறினர்.

​   csk vs rcb

தனி ஒருவனாக போராடிய தோனி அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 48 பந்துகளில் 84 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 160 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இறுதியில் உமேஷ் பந்தில் தாகூர் ரன் அவுட் ஆனதால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 160 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதனால் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பார்திவ் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று சென்னை அணி புள்ளி பட்டியலில் இறுதி பட்டியலில் உள்ளது.

அதேவேளையில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டும் தோல்வி அடைந்து சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

RCB pull off a thrilling one-run win over CSK

 

விளையாடிய 10 போட்டிகளில்
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.