Skip to main content

ஒரு பருவத் தேர்வில் அதிக பட்சம் மூன்று அரியர்களை மட்டுமே எழுத முடியும் - அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய தேர்வு வழிமுறைகள்

செமெஸ்டரில் 5 முறை தோல்வியா

பொறியியல் படிப்பில் முதல் செமெஸ்டர் தேர்வுகளை மூன்று முறை எழுதியும் தோல்வி அடைந்தால், மூன்றாவது ஆண்டிற்குள் செல்ல அனுமதி கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் ஐந்தாவது செமஸ்டர் பாடத்திட்டத்தில் பயில முடியாது, மீண்டும் முதல் செமெஸ்டர் பாடங்களை படிக்க வேண்டும்.

ஒற்றை இலக்கு செமஸ்டரிலும், இரட்டை இலக்க செமஸ்டரிலும் தோல்வியுற்றவர்கள் அதே மாதிரியான ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க செமஸ்டரில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

புதிய தேர்வு விதிமுறைகள்

ஒரு பருவத் தேர்வில் அதிக பட்சம் மூன்று அரியர்களை மட்டுமே எழுத முடியும் என்ற விதிமுறையும் இதில் இருந்தது. மாணவர்களின் எதிர்ப்பினை தொடர்ந்து தங்களின் புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது ஐந்தாவது செமஸ்டர் தேர்வில் நுழையும் போது மாணவர்கள் அரியர் எதுவும் வைத்திருக்கக் கூடாது என்று விதிமுறை விதித்திருக்கிறது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய தேர்வு விதிமுறைகளை அண்ணா பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி முதல் செமஸ்ட்டரில் ஒரு மாணவர் எந்த பாடத்திலாவது தோல்வி அடைந்தால், அதனை அடுத்த 3 செமஸ்டர் தேர்வுகளுக்குள் அப்பாடத்தினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

நான்காவது செமஸ்ட்டரிலும் அந்த பாடத்தில் தேர்ச்சி அடையவில்லை என்றால், ஐந்தாவது செமஸ்டர் பாடங்களை படிக்க இயலாது. மீண்டும் முதல் செமஸ்டரில் இருந்து படிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 வது செமஸ்டரில் நுழையும் போது 2 ம் செமஸ்டரின் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 7 வது மற்றும் 8 வது செமஸ்டர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

இந்த நடைமுறை தான் 6, 7, 8 என அனைத்து செமஸ்டர் மாணவர்களுக்கும் பின்பற்றப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை வரும் 2019-20 கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களுக்கும், 2017-18 ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கும், 2018-19 ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கும்  பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18 மற்றும் 2018-19 ஆகிய கல்வி ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் ஆறாவது செமஸ்டர் வரை நிலுவையில் உள்ள அரியர் பாடங்களை எழுதலாம், ஆனால் முதல் செமஸ்டரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து பாடநெறிகளையும் நிறைவு செய்தால் மட்டுமே அவர்களால் இறுதி ஆண்டிற்குள் செல்லமுடியும்.

கல்லூரியில் சேர்ந்து 7 ஆண்டிற்குள் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறாவிட்டால் அவர்களுக்கு பட்டம் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய விதிமுறைகளால் கல்வி தரம் உயரும் என அண்ணா பல்கலையின் துணை வேந்தர் கூறியுள்ளார்.

மாணவர்கள் தொடர்ச்சியாக அரியர் தேர்வுகளில் தோன்றக்கூடாது. மூன்று அரியர் முயற்சிகளில் அவர் வெற்றி பெறாமல் இருக்கும் பட்சத்தில், அவர் / அவள் பொறியியலாளர்களுக்கு தகுதி அற்றவர் என அவர் கூறினார்.

Failed 5 times? Redo course with juniors, say Anna University new norms

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.