Skip to main content

ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் சேவை - பயனாளர்கள் தவிப்பு

ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் சேவை - பயனாளர்கள் தவிப்பு

கூகுள் நிறுவனத்தின் யூ டியூப் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை, ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் வேகமாக பணியாற்றி யூ டியூப் சேவையை மீண்டும் செயல்பட வைத்தனர்.

யூ டியூப் சர்வரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் யூ டியூப் செயல்படாமல் அப்படியே முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பல கோடி யூ டியூப் பயனாளர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து யூ டியூப் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் களத்தில் இறங்கினர். மிக வேகமாக பழுது நீக்கும் பணி நடந்தது. ஒரு மணிநேரத்தில் மீண்டும் யூ டியூப் செயல்படத் துவங்கியது. இதனை யூ டியூப் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதில், "நாங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கினோம். அனைவருக்கும் நன்றி. இதனால் யூடியூப் பயனாளர்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தடையில்லாமல் தொடர்ந்து சேவை வழங்க உறுதி பூண்டுள்ளோம்’’ எனக் கூறியுள்ளது.

Server issue in youtube, has been fixed after an hour-YouTube back up after global outrage

youtube

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.