Skip to main content

நயன்தாரா மிரட்டும் ‘கொலையுதிர் காலம்’

நயன்தாரா மிரட்டும்  ‘கொலையுதிர் காலம்’

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படம் ஜனவரி மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. அவரது 34 வது பிறந்த நாள் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அதனை முன்னிட்டு "கொலையுதிர் காலம்" மற்றும் "சாய் ரா நரசிம்ம ரெட்டி" ஆகிய படங்களின் முதல் தோற்றம் (First Look) புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, லண்டனில் தொடங்கியது. மொத்தப் படப்பிடிப்பையும் ஒரே ஷெட்யூலில் முடித்துவிட்டனர்.

இந்தப் படம், பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படப் பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ளது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் தனது வீட்டில் தனியாக இருக்கும்போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவனிடம் இருந்து அந்த எழுத்தாளர் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் திரைக்கதை.

இந்தியிலும் ‘கொலையுதிர் காலம்’ உருவாகியுள்ளது. நயன்தாரா வேடத்தில் தமன்னா நடித்துள்ளார். தமன்னாவோடு இணைந்து முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபுதேவா மற்றும் பூமிகா இருவரும் நடித்துள்ளனர். இந்தியிலும் சக்ரி டோலட்டியே இயக்கியுள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஆனால், என்ன தேதி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

Nayanthara starring "Kolaiyuthir kaalam" is expected to release on january 2019.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.