Skip to main content

நடுக்கடலில் மக்களவை தேர்தல்: அஜத் தபு பகுதிக்கு விரைந்த தேர்தல் குழு!

ajad tapu

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளின் 20 பேர் கொண்ட குழு குஜராத் மாநிலம் அஜத் தபு எனும் தீவு பகுதியில் உள்ள 44 வாக்காளர்களுக்காக 20 வாக்குப்பதிவு எந்திரங்களை கடல்கடந்து கொண்டு சென்றுள்ளனர்.

6 ஆம் கட்ட மக்களவை தேர்தல் கடந்த மே 12 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்த தீவு பகுதி குஜராத் மாநிலம் ஜாம்நகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டது. இதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது.

ajad tapu

தேர்தல் குழுவினர் அந்த தீவை அடைவதற்கு படகு சவாரி, பிறகு மலை ஏறுதல் மற்றும் நீண்ட கார் பயணம் மேற்கொள்ளவேண்டி இருந்தது.

ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலின் போது தீவில் வாக்குரிமை பெற்ற 44 பேரில் 29 பேர் மட்டுமே அவரவர் வாக்குகளை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

அன்று குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

India election 2019: A journey across land and sea to reach 44 voters

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.