Skip to main content

நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளான "பிக் பாஸ்" சுஜா !!!

நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளான "பிக் பாஸ்" சுஜா !!!

விஜய் தொலைக்காட்சியில் வெளியான பிரபல நிகழ்ச்சியான "பிக் பாஸ்" மூலம் மக்களிடையே பரிட்சயம் ஆனவர் சுஜா எனும் சுஜா வருணி, இவர் தற்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீடு மருமகள் எனும் அந்தஸ்தை அடைந்துள்ளார்.

2002-ம் ஆண்டு வெளியான ‘ப்ளஸ் 2’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுஜா வருணி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஆண் தேவதை’.

படங்களின் மூலம் புகழ் கிடைக்காவிட்டாலும், கடந்த வருடம் (2017) ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைத்தது. குறிப்பாக, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனை அவர் ‘அப்பா’ என்றுதான் அழைத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளான "பிக் பாஸ்" சுஜா !!!

சுஜா வருணியும், நடிகர் சிவகுமாரும் 11 வருடங்களாகக் காதலித்து வந்தனர். சிவகுமார், நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனும் ஆவார். ‘சிங்கக்குட்டி’, 'புதுமுகங்கள் தேவை' உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார். சிவகுமார் "சிவாஜி தேவ்" என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர்கள் இருவருக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது.

க்ரவுன் ப்ளாஸா ஹோட்டலில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விஷ்ணுவர்தன், நடிகைகள் ஸ்ரீப்ரியா, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், லிஸி, வடிவுக்கரசி, ‘காதல்’ சந்தியா, விஜி சந்திரசேகர், நடிகர்கள் சிவகுமார், அஸ்வின், எம்.எஸ்.பாஸ்கர், கவிஞர் சினேகன், திமுகவைச் சேர்ந்த துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Bigg Boss tamil fame Suja Varunee got married to Sivaji Ganesan grandson Shivakumar. 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.