Skip to main content

நடிகர் அர்ஜுனை கைது செய்வதற்கு தடை ‍- கர்நாடகா உயர்நீதிமன்றம்

#MeToo scandal karnataka highcourt stays the arrest order against actor arjun

நடிகர் அர்ஜுன் மீது  #MeToo புகார் அளித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரனின் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அந்த வழக்கில் நடிகர் அர்ஜூனை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிபுணன் படத்தில் நடித்த போது, கதாநாயகன் அர்ஜூன் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் என்பவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது நடிகர் அர்ஜூன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

அதனை தொடர்ந்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகர் அர்ஜூன் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

படத்தில் உருவாக்கப்பட்ட காட்சிகளை வைத்து, இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது பொய்யான புகார் என்ற வாதங்கள் அர்ஜுன் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டன.

இதை கேட்ட நீதிபதி தினேஷ் குமார், நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும் காவல்துறையினர் ஸ்ருதி ஹரிஹரன் புகார் தொடர்பாக விசாரணை செய்யலாம் எனவும், அதற்கு எந்த தடையுமில்லை என்று தெரிவித்தார்.

#MeToo scandal karnataka highcourt stays the arrest order against actor arjun

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.