Skip to main content

நொய்டா மெட்ரோ மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!

நொய்டா மெட்ரோ மருத்துவமனை

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் பல அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்றில் மெட்ரோ மருத்துவமனை மற்றும் இருதய அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இங்கு உள்ள செக்டார் 12 இல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து 4 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றன. அவர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு 35 நோயாளிகளை மீட்டு உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை வெளியேற்ற முயற்சிப்பதும், அடர்த்தியான புகை அந்த மருத்துவமனை கட்டடத்திலிருந்து வெளியேறுவதை காண முடிந்தது. அங்கு சிக்கிய பொதுமக்கள் ஜன்னல் வழியாக வெளியே குதிக்க முயற்சித்தனர்.

ஜன்னல் உடைத்து தப்பிச்செல்ல முயன்றவர்கள் கயிறு வழியே வெளியேறினர்.

தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கட்டிடத்தில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியது. கட்டிடத்தின் வராண்டா மற்றும் பால்கனியில் நின்றிருந்த மக்களை மீட்பதற்காக கண்ணாடி ஜன்னல்களை உடைத்து கொண்டு மீட்பு பணியாளர்கள் சென்றனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தோர் மற்றும் பிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அனைத்து நோயாளிகளும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையின் பிரிவு -11 கிளைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீ விபத்திற்கான காரணம் எதுவும் உறுதி செய்யவில்லை, இருப்பினும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீப்பிடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

அப்பகுதியில் தொடர்ந்து தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Massive fire at Metro Hospital Noida; over two dozen patients trapped

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.