Skip to main content

நம் உணவு விஷமாகிவிட்டது... மாற்றுவோம் வாங்க! - கமல் ஹாஸன்

IMG

நாம் உண்ணும் உணவு விஷமாகிவிட்டது... பாரம்பரிய விதை களை விதைக்கும் இந்த புரட்சி வெற்றி பெற்றால் நாம் வி‌ஷ உணவில் இருந்து விடுபடலாம் என்று கமல் ஹாஸன் கூறினார்.

நடிகர் ஆரியின் 'மாறுவோம் மாற்றுவோம்' தொண்டு நிறுவனம் சார்பில் 'நானும் ஒரு விவசாயி' என்ற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர். இந்த சாதனை நிகழ்ச்சி வருகிற 26-ந்தேதி திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்கான விழிப்புணர்வு போஸ்டரை நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டார்.

பாலை ஆகும் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நானும் ஒரு விவசாயிதான். பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து நாமும் மாறுவோம். மாற்றுவோம். நமது அஜாக்கிரதையால் நதிகள் சாக்கடை ஆகும். நிலங்கள் பாலை ஆகும்.
 

உணவில் விஷம் உணவில் உள்ள சத்துக்களை சாப்பிடுவதற்காக பூச்சிகள் வருகின்றன. அதை சாப்பிடும் பூச்சிகளைக் கொல்வதற்காக மாற்று விதையில் நஞ்சை ஏற்றுகிறார்கள். அந்த வி‌ஷம் நம்மையும் படிப்படியாக கொல்லும் என்பதை அறிய வேண்டும். எனவே, இயற்கை உரம் கொண்டு பாரம்பரிய நாட்டு விதைகளில் உருவாகும் உணவுகளை உண்போம். வீட்டு மாடியில் நமக்கு தேவையானதை பயிரிடுவோம். நானும் என் வீட்டு மாடியில் அதற்கான ஏற்பாடுகளை செய்து இருக் கிறேன்.

Tamil