Skip to main content

நல்லவர் துணை நின்றால் 40 ம் எளிதே - கமல்

kamal

மக்கள் நீதி மய்யத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தையடுத்து, நல்லவர் துணை நின்றால் 40-ம் எளிதே என்று கமல் தெரிவித்துள்ளார். பாஜகவின் பி டீம் என்ற கெட்ட வார்த்தையால் சிலர் தங்களை திட்டுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை வாயில் சுடுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி நெல்லையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் எதிரே உள்ள பெல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட அக்கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதில் கமல் உள்ளூர் முதல் தேசிய அரசியல் வரை பேசினார்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், கட்சியின் விருப்ப மனு படிவத்தை மேடையில் வெளியிட்டார்.

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சேரும் கூட்டணி வலுவாக இல்லை என்றும், தமிழ்நாட்டில் 40 அல்ல 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

rajini and kamal

தொடர்ந்து, தமிழகத்தை சிலர் கொல்லைப்புறமாக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும் நாள் வரும் என தெரிவித்தார். தேர்தலை மனதில் வைத்தே 60 லட்சம் குடும்பங்களுக்கு 2,000 சிறப்பு நிதி வழங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

மக்கள் நீதி மய்யத்தை பாஜகவின் பி டீம் என்ற கெட்டவார்த்தையில் சிலர் விமர்சிப்பதாக கூறிய கமல்ஹாசன் தாங்கள் யாருக்கும் பி டீம் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்றதற்கும், முதல்முறையாக தேர்தலில் போட்டியிட உள்ள கமல்ஹாசனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர், என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்" என ரஜினி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan On His Party's Anniversary

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.