Skip to main content

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டி20 இந்தியா அபார வெற்றி‍!

rohith sharma

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, ரோகித் சர்மா (50), ரிஷப் பண்ட் (40) உள்ளிட்டோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.

இந்நிலையில் முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்றதால் தொடர் 1-0 என இருந்தது. தற்போது இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் டி 20 போட்டி தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்று, தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடவுள்ளது. முதல் போட்டி வெலிங்டனில் பிப்ரவரி 6 ஆம் தேதி துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இருப்பினும் இந்திய அணி 80  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 219 ரன்கள் எடுத்தது.  

ஏற்கெனவே ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்றது. உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ரோஹித் ஷர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார்.

க்ருணால் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணி விபரம் 

நியூசிலாந்து: முன்ரோ, டிம் செய்ஃபெர்ட், வில்லியம்சன், ராஸ் டெய்லர், டர்யல் மிட்செல், க்ராண்தோம், சாண்டனர், ஸ்காட் குகெலிஜின், சவுத்தி, சோதி, பெர்குசன்,

இந்தியா: தவான், ரோஹித், பன்ட், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சஹால், கலீல் அகமது.

இந்தப் போட்டியில் ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா 29 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், சர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ரோகித் சர்மா 35 ரன்னைத் தொட்டபோது, நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை (2,272) பின்னுக்குத் தள்ளி சர்வதேச டி-20 அரங்கில் முதல் இடத்தைப் பிடித்தார்.

இந்த போட்டிக்கு முன்பு வரை, ரோகித் சர்மா 2,238 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் இருந்தார். இந்த போட்டியில் 50 ரன்கள் அடித்ததன் மூலம், 2,288 ரன்கள் சேர்த்துள்ளார். அத்துடன், ரோகித் சர்மா சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் 4 சதம், 15 அரைசதம் விளாசியுள்ளார்.

மூன்றாவது டி 20 போட்டி வருகின்ற 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

India vs Newzealand T20: 2 nd T-20 India won the match by 7 wickets.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.