Skip to main content

நியூசிலாந்து Vs இந்தியா: டி 20 தொடர் இழப்பு ஏமாற்றம் அளிக்கிறது - ரோஹித் சர்மா!

ரோஹித் சர்மா

வெற்றியைத் தவறவிட்டது வேதனையளித்தாலும், நியூசிலாந்து பயணத்தில் ஏராளமான இனிய நினைவுகளைச் சுமந்து கொண்டு செல்கிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். 

தென் துருவ நாடுகளான ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு மறக்க முடியாத வெற்றிகள் கிடைத்தன.

ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனையாக டெஸ்ட், ஒருநாள் தொடரைக் கைப்பற்றி, டி20 தொடரைச் சமன் செய்தது இந்திய அணி.

நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் வென்றது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், "இந்த டி20 தொடரை இழந்தது வேதனையளித்தாலும், நாங்கள் மோசமாகத் தோற்கவில்லை. மிகக் கடினமான இலக்கைக் கடைசிவரை துரத்திச் சென்று எட்டாமல் விட்டுவிட்டோம்.

213 ரன்களை 20 ஓவர்களில் அடைவது கடினமானது. தோல்வி என்பதைவிட வெற்றியை விட்டுவிட்டோம். கடைசி ஓவரில் பதற்றப்படாமல் யார்கர்களை வீசி நியூசிலாந்து வீரர்கள் கட்டுப்படுத்திவிட்டார்கள்.

நியூசிலாந்து தொடரில் ஏராளமான நல்ல, சாதகமான விஷயங்கள் நடந்துள்ளன. ஒருநாள் தொடரை சிறப்பாகத் தொடங்கினோம். இந்தத் தொடரில் வீரர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர், கடினமாக உழைத்தனர். தவறுகளில் இருந்து அதிகமாகக் கற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்" எனத் தெரிவித்தார்.

இந்தவெற்றி குறித்து நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் கூறுகையில், " டி20 கிரிக்கெட் போட்டிக்குச் சிறந்த விளம்பரமாக இந்தப் போட்டி அமைந்தது. அதிகமான ஸ்கோர்கள். முதல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டோம், 2-வது போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றோம். இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கடினமான போட்டியைக் கொடுத்தன. இதில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டதால் வெற்றி பெற்றோம் " எனத் தெரிவித்தார்.

அடுத்தகட்டமாக, இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

பிப்ரவரி 24 முதல் மார்ச் 13 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும்.

இந்த தொடரில் இரண்டு டி 20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது.

தற்போது அப்போட்டிகள் நடைபெறும் இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதில் ஒரு நாள் போட்டிகள் ஹைதராபாத், நாக்பூர், ராஞ்ஜி, மொஹாலி, டெல்லி ஆகிய  நகரங்களிலும், 20 - 20 போட்டிகள்  பெங்களூரு , விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

India vs New Zealand: Disappointed with T20 series loss but lots of positives - Rohit Sharma

t20

odi

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.