Skip to main content

நியுசிலாந்து மசூதி தாக்குதலுக்காக பழிவாங்கப்பட்டதா இலங்கை தேவாலயங்கள்? - திடுக்கிடும் பின்னணி!!!

lanka serial blast

உலகை உலுக்கிய இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட 40 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் ஆவார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சர்வதேச அளவில் சதிவலை பின்னப்பட்டு இந்த தாக்குதல் நடந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதில் நேரடியாக ஈடுபட்ட தற்கொலைப்படையினர் 7 பேரும், இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள்.

இது சன்னி பிரிவை சேர்ந்த அமைப்பு என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 8 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.

srilanka serial blast

3 தேவாலயங்கள், 3 சொகுசு நட்சத்திர ஓட்டல்கள் இந்த தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி தகர்க்கப்பட்டன. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 321 ஆக உயர்ந்துள்ளது.

நியூசிலாந்து நாட்டில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் நடத்தியதாக கருதப்படுகிறது.

ஆனால் அந்த இயக்கத்துக்கு மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தும் அளவுக்கு தொழில் நுட்ப மற்றும் ஆள் பலம் இல்லை என்று கூறப்படுகிறது.

srilanka serial blast

என்றாலும் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் உறுப்பினர்கள் தான் அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. வெடிகுண்டுகளை தயாரிப்பது, அவற்றை எடுத்துச் செல்வது போன்ற வேலைகளை அந்த இயக்கம் ஒருங்கிணைத்து செய்து கொடுத்துள்ளது.

தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது ஐஎஸ் பயங்கரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. நேற்று ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு டெலிகிராம் சேனல் ஒன்றில் மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் படம் வெளியிடப்பட்டது.

அந்த படங்களில் அபு உபைதா, அப்துல்பாரா, அப்துல் முக்தர் ஆகிய 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் உள்ளனர்.

terrorist

அவர்கள் ஐஎஸ் கொடிகளை பிடித்தப்படி நிற்கிறார்கள். இவர்கள் மூவரும் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை படையில் இடம் பெற்று இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ISIS role suspected in Sri Lankan terror attacks; revenge for New Zealand church attacks probable motive

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.