Skip to main content

நியூசிலாந்து மசூதி தாக்குதல்: கைது செய்யப்பட்டவர் தீவிரவாதி என நீதிமன்றம் அறிவிப்பு!

#Newzealand

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான மத்திய கிறிஸ்ட்சர்ச்சில் மசூதியில் கடந்த மார்ச் 15 ஆம் நாள் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 51 பேர் உயிரிழந்தனர்.

இந்த  சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் மார்ச் 16 ஆம் நாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பிரென்டனை காவலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

newzealand

இந்நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கேமரூன் மாண்டரின் (Justice Cameron Mander) முன் ஆக்லாந்தின் பிரேமோர்மோ சிறையில் (Auckland’s Paremoremo prison) இருந்து கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் வீடியோ இணைப்பு வழியாக ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிறகு குற்றவாளி நீதிமன்றம் முன் ஆஜராவது இது இரண்டாவது முறையாகும் . அவர் மீது 51 கொலை வழக்குகளை நியூசிலாந்து காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

மேலும் "கொலை செய்ய முயன்றதாக" 39 வழக்குகளை அவர் மீது பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு மனநல சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர் தீவிரவாதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து மசூதி தாக்குதல் : குற்றவாளி

அவர்மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், 51 கொலை வழக்குகள், கொலை செய்ய முயற்சி செய்ததாக 40 வழக்குகளும் அவர்மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்ட்சர்ச் மசூதியில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

பிரதமர் ஜெசிந்தா அடேர்ன் இந்த தாக்குதல் சம்பவத்தை ஒரு நன்கு திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக வகைப்படுத்தியுள்ளார். ஆனால் இப்போது வரை அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறைவாகவே உள்ளது. "நியூசிலாந்தின் பயங்கரவாத அடக்குமுறை சட்டம்" 2002 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அந்த சட்டம் நீதிமன்றங்களில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

Christchurch terrorist to undergo mental health tests

newzealand

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.