Skip to main content

நியூசிலாந்தின் நியூகாலிடோனியாவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு

நியூகாலிடோனியா நிலநடுக்கம்

நியூசிலாந்தின் தெற்கு பசிபிக்கில் உள்ள நியூகாலிடோனியாவில் 7.6 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த மிகப்பெரிய நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கி மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நியூ காலிடோனியாவின் லாயல்டி தீவுகளுக்கு 155 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நிலநடுக்க மையத்திலிருந்து சுமார் 1000 கி மீ க்கும் உள்ளான பகுதிகளில் கடும் சுனாமிப் பேரலைகள் தாக்க வாய்ப்பிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நியூ காலிடோனியா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லாயல்டி தீவுகள் மற்றும் நியூ காலிடோனியாவில் கடலோரத்தில் இருக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பு இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலைகள் சுமார் 1 மீ முதல் 3 மீ உயரம் வரை எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் இதுவரை எதுவும் இல்லை.

A powerful new earthquake of 6.6 magnitude hits off New Caledonia on December 5.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.