Skip to main content

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான மத்திய பட்ஜெட் குழு!

finance team

நரேந்திர மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. 

புதிய நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன், ஜூலை 5 தேதி முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். 

பட்ஜெட் குழு:

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குழுவில், அனுராக் சிங் தாக்கூர் மற்றும் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஆகியோர் உள்ளனர். 

nirmala

நிதித் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க், செலவுகளுக்கான செயலர் கிரிஷ் சந்திர முர்மு, வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே, டி.ஐ.பி.ஏ.எம் துறையின் செயலர் அதானு சக்ரபோர்தி, நிதி சேவைகள் செயலர் ராஜிவ் குமார் ஆகியோர் பட்ஜெட் குழுவை வழிநடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் குறித்து அனைத்துத் தகவல்களையும் ரகசியமாக வைத்திருக்கும் நோக்கில் இந்த வரும் ஜூன் 17 ஆம் தேதி முதல் நிதி அமைச்சகத்திற்கு ‘பூட்டும்' நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

budget

மந்தமாக இருக்கும் பொருளாதாரம், நிதித் துறையில் இருக்கும் சுணக்கங்கள், வேலைவாய்ப்பின்மை, தனியார் முதலீடுகள், ஏற்றுமதியில் இருக்கும் பின்னடைவு, விவசாயப் பிரச்னை, பொதுத் துறை முதலீடுகள் உள்ளிட்டவை குறித்து பட்ஜெட் மூலம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீர்வு காண வேண்டியிருக்கும். 

வரும் ஜூலை 17 முதல் 26 வரை, 17 வது மக்களவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.