Skip to main content

நிப்பா நோய் தாக்கம்: மதுரை கோவை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள்!

நிப்பாஹ் வைரஸ்

நிபா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக - கேரள எல்லையில் பலத்த சோதனை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட எல்லையில் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகின்றன.

பாலூட்டி வகையை சேர்ந்த வௌவால் கடித்த பழங்களை மனிதர்கள் உண்பதால் நிபா வைரஸ் பரவுகிறது.

transmission

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

"தமிழகத்தை பொறுத்தளவில் நிபா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சோதனை சாவடிகளில் மருத்துவ குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன" என தமிழக சுகாதரத்துறையின் கூடுதல் இயக்குனர் வடிவேலன் கூறினார்.

இந்தியாவில் -  கொடூரமான நிப்பாஹ் வைரஸ்

மேலும், மருத்துவ குழுவில் உள்ளவர்கள் நிபா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் யாருக்கேனும் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்கின்றனர். பறவைகள் கடித்த பழங்களை யாரும் உண்ண வேண்டாம். பழங்களை நன்றாக கழுவி உண்ணவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Nipah scare: Isolation wards set up at Madurai, Coimbatore GHs

nipah isolation ward

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.