Skip to main content

நீட் தேர்வு முடிவுகள்: 701 மதிப்பெண்கள் எடுத்து ராஜஸ்தான் மாணவர் தேசிய அளவில் முதலிடம்

நீட் தேர்வு முடிவுகள்

2019 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நலின் காந்தெல்வால் எனும் மாணவர் 720 க்கு 701 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அனைத்து இந்தியா ரேங்க் பட்டியலில் நலின் முதலிடம் பிடித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த பாவிக் பன்சல் 700 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்தஹ் மற்றொரு மாணவர் அக்ஷத் கௌசிக் 700 மதிப்பெண்கள் எடுத்த நிலையிலும் ரேங்க் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இரு மாணவர்கள் ஒரே மதிப்பெண்கள் எடுக்கும் பட்சத்தில், உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடத்தில் அதிக மதிப்பெண்களை பெறும் மாணவருக்கு ரேங்க் பட்டியலில் முன்னுரிமை வழங்கப்படும், தொடர்ந்து வேதியியல் மதிப்பெண்களை கருத்தில் கொண்டும் முன்னுரிமை வழங்கப்படுகிறது, அதன் பிறகு எந்த மாணவர் குறைந்தபட்ச தவறான பதில்கள் எழுதியுள்ளாரோ? அவருக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மாணவிகளில், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மாதுரி ரெட்டி முதலிடம் பிடித்துள்ளார் அனைத்து இந்திய ரேங்க் பட்டியலில் அவர் 7 வது இடம் பிடித்துள்ளார்.

தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 20 பேர் மாணவிகள். முதல் 20 இடம் பிடித்தவர்களின் 2 மாணவிகள் உள்ளனர்.

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 74.92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டெல்லியை தொடர்ந்து ஹரியானா 73.41 சதவீதமும், சண்டிகர் 73.24 சதவீதமும் பெற்று முறையே 2 மற்றும் 3 ஆம் இடங்களில் உள்ளன.

தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Nalin Khandelwal from Rajasthan tops NEET 2019 scoring 701.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.