Skip to main content

நீட் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் உச்ச நீதிமன்றம் புதிய மாற்றம்!!!

நீட் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பில் உச்ச நீதிமன்றம் புதிய மாற்றம்!!!

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் கலந்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று நவம்பர் 29 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. 25 வயது முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் எழுதலாம். 

அதே நேரத்தில் அப்படி தேர்வு எழுதுபவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்வது குறித்து உச்ச நீதிமன்றம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

மருத்துவப் படிப்புகளில் பயில கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது.

2019-ல் நடைபெறவுள்ள நீட் தேர்வுகள் வரும் மே 5-ம் தேதி நடைபெறும். இதற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

முன்னதாக நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்க நாளை நவம்பர் 30 ஆம் தேதி கடைசியாக இருந்த நிலையில், ஒரு வாரத்திற்கு கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வரை நீட் தேர்வுகளை சிபிஎஸ்சி நடத்தி வந்தது. அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை NTA எனப்படும் தேசிய தேர்வு நிறுவனம் நடத்தவுள்ளது.

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

Students older than 25 can take NEET 2019, SC extends last date to apply by a week

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.