Skip to main content

நீட் தேர்வு 2019: கோவை மாணவருக்கு உதவிய காவலர்!

நீட் தேர்வு 2019:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் 155 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் நேற்று மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை, 15 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

தமிழகத்தில் சுமார் 1 லட்சத்தி 40 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 19 ஆயிரத்தி 638 பேர் அரசு வழங்கும் நீட் பயிற்சி மையங்களில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டது.

neet 2019

புயல் காரணமாக ஒடிசாவில் மட்டும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், கோவையில் நீட் தேர்வு நடைபெறும் நேஷனல் மாடல் பள்ளியில், காவலர் சரவணக்குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மாணவர் ஒருவர் செய்வதறியாது, உதவிக்காக சுற்றிவருவதை கண்டுள்ளார்.

அப்போது, அந்த மாணவனை காவலர் விசாரித்துள்ளார். அதில், அந்த மாணவர் தேர்வுக்கு புகைப்படம் எடுத்து வர மறந்துவிட்டதாகவும், இதனால், தான் தேர்வு எழுத முடியாது என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைகேட்ட காவலர், உடனடியாக அந்த மாணவனிடம் ரூ.40-ஐ வழங்கி புகைப்படம் எடுக்க உதவியுள்ளார். உடனடியாக புகைப்படம் எடுத்து வந்த மாணவன் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்துள்ளார்.

உரிய நேரத்தில் காவலர் செய்த அந்த உதவிக்கு தேர்வு மையத்தில் இருந்த அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

NEET 2019: Cop helps a student to attend the exam in coimbatore

நீட் தேர்வு
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.