Skip to main content

நீரவ் மோடிக்கு நான்காவது முறையாக ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!

நிரவ் மோடி

லண்டனில் கைது செய்யப்பட்ட வங்கி மோசடி மன்னன் நீரவ் மோடி மீண்டும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் அணுகிய நிலையில், ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.

இந்தியாவின் பஞ்சாப் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பித்து ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடியை லண்டன் காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் கைது வாரன்ட்டை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் லண்டனில் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

nirav modi

20-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது நீதிமன்றக்காவல், கடந்த மார்ச் 29-ம் தேதி முடிந்தது.  அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. சாட்சியங்களை கலைத்து விடுவார் என இந்திய தரப்பில் வாதிடப்பட்டது.

nirav modi

அதனால் லண்டன் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மூன்றாவது முறையும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், நிரவ் மோடி ஜாமீன் கோரி இங்கிலாந்தின் ராயல் நீதிமன்றம் முன் நான்காவது முறையாக இன்று ஆஜரானார்.

ஏற்கனவே மூன்று முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 4வது முறையாக இன்றும் அவரது ஜாமீன் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

Nirav Modi Denied Bail, Judge Says Attempt Made to Destroy Evidence

the royal court

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.