Skip to main content

நீலகிரி மாவட்ட ஆட்சியரை மாற்றக்கோரிய தமிழக அரசின் மனுவிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர்

கடந்த நவம்பர் 28 ஆம் தேதி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது தொடர்பாக தமிழக அரசு அளித்திருந்த மனுவிற்கு, நீதிமன்ற முன் அனுமதி இல்லாமல் ஆட்சியரை மாற்றக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 28 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

முதுமலை தேசிய பூங்கா அருகே மசினங்குடி பகுதியில் உள்ள யானைகள் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பியிருந்தார். இதனிடையே, அப்பகுதியில் உள்ள சில கட்சி அமைப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில், நீதிபதி மடான் பி. லோகூர் மாவட்டச் செயலகம் சட்டவிரோதமான இடங்களை மூடுவதற்கும், குறிப்பாக எந்தவொரு முரண்பாட்டின் பின்னணியிலிருந்தும் மாவட்ட கலெக்டரை பாதுகாப்பதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி, உச்சநீதிமன்றம் யானைகள் செல்லும் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள 27 சட்டவிரோத தாங்கும் விடுதிகளை மூட உச்சநீதிமன்றம் தமிழக அரசு உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்த அறிக்கை, அப்பகுதியில் செயல்பட்டு வந்த 39 தாங்கும் விடுதிகளின் விரிவான தகவல்களை கொண்டுள்ளது.

வழக்கை தீர்மானிப்பதில் ஆட்சியரின் உதவி தேவைப்படும் என்பதால், நீதிமன்ற அனுமதியின்றி அதிகாரி மாற்றப்படமாட்டார் என்று நீதிபதி லோகூர் கூறியுள்ளார்.

மேலும், தங்கும் விடுதிகளை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் மின் வேலியை அகற்றுவதற்கான அறிக்கையையும் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தது.

நீலகிரிகளில் யானைகள் செல்லும் வழித்தடம் 22.6 கிமீ நீளமும், 1.5 கிமீ அகலமும் கொண்டது. இது கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சிக்கு இடையே சுமார் 900 யானைகள் செல்ல வேண்டிய முக்கியமான இணைப்பு வழியாகும்.

 Supreme Court barred the TamilNadu government from transferring the Nilgiris District Collector 

 without the court’s prior permission on November 28.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.