Skip to main content

நெருங்கும் "ஃபானி": விடுப்பில் சென்ற மருத்துவர்கள், சுகாதர அதிகாரிகள் பணிக்கு திரும்ப உத்தரவு!

fani puyal

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி (Fani) புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் புரி பகுதியில் நாளை மே 3 ஆம் தேதி மாலை கரையை கடக்க உள்ளது. 

இதன் காரணமாக ஒடிசா, தமிழகம், ஆந்திர உள்ளிட்ட கடலோர பகுதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவசர நிலை ஏற்படும் பட்சத்தில், மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் மேற்கொள்ள கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

fani cyclone

ஒடிசாவில் புரி, ஜகத்சிங்பூர், கேந்திராபாரா, பாத்ராக், பாலாசோர், மாயூர்பாஞ், கஜபதி, கஞ்சம், கோர்தா, கட்டாக் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காரணமாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அங்குள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். புயல் காரணமாக ஒடிசாவில் 11 மாவட்டங்களில், தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வானிலை மையத்தால் ஒடிசா மாநிலத்திற்கு நேற்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது.

fani puyal

இதைத்தொடர்ந்து, ஒடிசா அரசு இன்று முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 3 நாட்கள் விடுமுறை விடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

மேலும், கடற்கரை பகுதிகளில் உள்ள 8 லட்சம் மக்கள் வரை பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அனைத்து மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளின் விடுப்பும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

fani cyclone

கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் கீழ் 74 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து ஒடிசா வழியாக செல்லும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பில் சிக்கும் மக்களுக்கு வழங்க ஒரு லட்சம் உலர் உணவுப் பொட்டலங்கள் பல்வேறு இடங்களில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

அதி தீவிரப்புயலாக மையம் கொல்லும் போது காற்றின் வேகம் 170 - 180 கி.மீ வேகத்தில் வீசலாம் என்றும் அதிகபட்சமாக 195 - 200 கி.மீ வேகத்திலும் காற்று வீசலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Agencies ready to meet any eventuality arising out of cyclone Fani

fani cyclone


 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.