Skip to main content

நாடு முழுவதும் நவம்பர் 9 ஆம் தேதி மாபெரும் போராட்டம் - காங்கிரஸ் அழைப்பு

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியைக் கண்டித்து நாடு தழுவிய மாபெரும் கண்டன போராட்டம் எதிர்வரும் நவம்பர் 9 ஆம் தேதி நடக்க உள்ளதாகவும், இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 8 ஆம் தேதி 500 ரூபாய் மற்றும் ௧௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இதையடுத்து மக்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டனர். அதில் இன்னும் 1000 ரூபாய் நோட்டு இன்னும் வெளியிடப்படவில்லை.

இதன் 2 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக எழுந்த ரூபாய் நோட்டு விவகாரத்தில், இந்தியப் பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீர்குலைத்து விட்டார். கருப்புப்பணம் ஒழிப்பு, பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல், கள்ள நோட்டுகளை அழித்தல் ஆகிய மூன்று நோக்கங்களையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் 9 ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும். காங்கிரஸ் தொண்டர்கள், அன்றைய தினம் காலை 11 முதல் 1 மணி வரை ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம் என்றும் அவர் கூறினார். 

Congress to hold Nation wide protest on 2 Years of demonetisation

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.