Skip to main content

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும்!

neet exam

நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டிற்கான  அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயில மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது தேர்வு மே மாதம் நடைபெற்ற நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது..

மருத்துவம் பயில மாணவர் சேர்க்கை  நீட் முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இந்த தேர்வு கடந்த மாதம் (மே) 5-ந் தேதியும், 20-ந்தேதியும் நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு இன்று ஜூன் 5 ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது.

 

neet exam

 

தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, மொத்தம் 15,19,375 மாணவர்கள் நீட் 2019 நுழைவு தேர்வுக்கு பதிவு செய்தனர், இதில் 14,10,754 மாணவர்கள் தேர்வில் கலந்துகொண்டனர்.

தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரியில் நேரடியாக தெரிந்துகொள்ளலாம்:

https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx

NEET 2019 Result will be Out by 4:00 PM ON ntaneet.nic.in

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.