Skip to main content

நாட்டின் மனநிலையை வெளிப்படுத்திய சட்டமன்ற தேர்தல் - நவீன் பட்நாயக்

நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தால் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக், கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தேசத்தின் மனநிலையைக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.

தேர்தல் நடைபெற்ற அனைத்து மாநிலங்களுமே பெரும்பாலும் விவசாய விளைநிலம் மிகுதியான மாநிலங்களாக இருந்தது. மத்திய அரசு விவசாயிகளுக்கு, பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்துள்ளது. மேலும், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை செயல்படுத்த தவறியுள்ளதாகவும் திரு. பட்நாயக் கூறினார்.

தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் மிசோ தேசிய முன்னணி கட்சிகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஒரேநேரத்தில் நடைபெற இருக்கும் ஒடிசா லோக்சபா சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு தாக்கமும் ஏற்படுமா என்று கேட்டதற்கு அது தேசத்தின் மனநிலை என்றும், ஒடிசா தேசத்தின் ஒரு பகுதி என்றும் அவர் தெரிவித்தார்.

மாறிய அரசியல் சூழ்நிலையில் கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றிய வினாவிற்கு பதிலளித்த திரு. பட்நாயக், மீண்டும் வலியுறுத்தினார் பிஜு ஜனதா தால் கட்சி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வில் இருந்து எப்போதும் சம தூரத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் எதிர்காலத்தில் பார்க்கலாம் என்றும் கூறினார்.

Odisha CM and BJD president Naveen Patnaik said that the Assembly election results in the five States

“shows the mood of the nation” on Dec 11.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.