Skip to main content

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் தேர்வு!

ஐஐடி மெட்ராஸ்

கல்வி நிறுவனங்கள் தான் ஒரு நாட்டின் தலை எழுத்தை எழுதுகின்றன...ஆம்..! எவ்வாறான சூழ்நிலையில் கல்விகள் போதிக்கப்படுகின்றன என்பது மிக முக்கியமான ஒன்று என்று நாம் அனைவரும் அறிவோம்.

தேர்ந்த ஆசான்கள், அறிவார்ந்த கட்டமைப்புகள், ஒழுக்கமான சுதந்திரம் என எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் கல்லூரிகள் கிடைப்பது வரம் என்று தான் சொல்லவேண்டும்.

அந்த வரிசையில் முதலிடம் என்றால் எவ்வளவு அழகாய் இருக்கும்... எல்லாவற்றிலும் சிறந்த கட்டமைப்புகள் கொண்ட, மாணவர்கள் மனதில் எரிச்சல் ஏற்படுத்தாத கல்வியை தரமாக போதிக்கும் வழக்கம் கொண்ட பட்டியலில் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ்

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி ஐஐடி நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

பட்டியலில் முதல் 10 இடங்களுக்கு 7 இடங்களை ஐஐடி நிறுவனங்களே பெற்றுள்ளன.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 7 வது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 10 வது இடத்தையும் பெற்றுள்ளன.  

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் இந்தப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.

ஐஐடி மெட்ராஸ்

நாட்டில் உள்ள 3,127 கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

கற்பிக்கும் முறை, ஆராய்ச்சி முறை, உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் திறமை, தொழில்முறை அனுபவங்கள் பெறுவது உள்ளிட்ட ஏராளமான காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

NIRF 2019 ranking: IIT Madras tops in overall category; 6 DU colleges in top 10 colleges list

ஐஐடி மெட்ராஸ்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.