Skip to main content

நான்கு தொகுதிகளுக்கான‌ இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு தேமுதிக ஆதரவு!

அதிமுகவிற்கு தேமுதிக ஆதரவு!

தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்றுடன் (April 29) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.

இதில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்து திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டன.

admk

கடைசி நாளான இன்று அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். 

அதிமுக சார்பில் சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ்.முனியாண்டி, ஓட்டப்பிடாரம்(தனி) தொகுதியில் பெ.மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளிக்கும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கும் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.

DMDK will support ADMK in upcoming by-election at 4 assembly constituencies - says dmdk Chief Vijayakanth.

dmdk supports admk

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.