Skip to main content

நாளை வெளியாகிறது "அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்"

அவெஞ்சர்ஸ்

 "அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்" படம் நாளை ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

"அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்" படத்தின் தமிழ் பதிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு தமிழில் வசனம் எழுதுகிறார் இயக்குனர் முருகதாஸ்.

இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது "அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்". இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படவரிசையில் 4 வது பாகமான "அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்" இந்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

avenger

ஹாலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்துக்கு தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதுகிறார். இதை டிஸ்னி இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“எப்போதும் மார்வெல் படங்களை ஆச்சர்யத்துடன் ரசித்து பார்ப்பேன். "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" படத்தை நாடே ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஒரு மார்வெல் ரசிகனாக அயர்ன்மேன், தோர், கேப்டன் அமெரிக்கா போன்ற சூப்பர்ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ஒரு படத்தின் அங்கமாக இருப்பது மகழ்ச்சியை தருகிறது.

avenger infinity war

என் மகன் ஆதித்யாவுக்கு நன்றி. படத்தில் தமிழுக்கு ஏற்றார்போல் சில விஷயங்களை சேர்த்துள்ளேன் என முருகதாஸ் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

இப்படத்திற்கு விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உட்பட பலர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

ஆனால் இப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

The Much Awaited "Avengers: Endgame" is set to release tomorrow in India.

​    ​avengers end game

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.