Skip to main content

நாளை துவங்குகிறது 12 வது இந்திய ப்ரீமியர் லீக்!

ipl

12-வது ஐபிஎல் எனப்படும் இந்திய ப்ரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி நாளை மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 

முதல் போட்டியில் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் கிங் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி மோதுகிறது.

ஐபிஎல் தொடரை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை தங்களது நாட்டில் ஒளிபரப்பப்போவதில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ipl

மார்ச் 23-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரையிலான போட்டியின் விவரங்கள் ஐபிஎல் வெளியிட்டுள்ள அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. 

அனைத்து போட்டிகளும் இந்தியாவில்தான் நடைபெறும். இடம்பெற்றுள்ள 8 அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் 7 போட்டிகளில் பங்கேற்கும் என  பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ipl
போட்டி நடைபெறும் மைதானங்கள்

துவக்க விழா ரத்து!

எப்போதும் போல் அல்லாமல் இந்த ஆண்டு ஐபிஎல் 2019 ஆண்டிற்கான துவக்க விழா ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக துவக்க விழாவிற்கு என ஒதுக்கிய பணம், ஜம்முவின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 40 மத்திய ரிசர்வ் படை வீரர்களின் குடும்பங்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பண-நிறைந்த T20 லீக்கின் துவக்க விழாக்கள் எப்போதும் பாலிவுட் நட்சத்திரங்கள் சிறப்பம்சமாக நிகழ்த்திய நிகழ்ச்சிகளுடன் கவர்ச்சியாகவும் வண்ணமயமாகவும் இருக்கும்.

csk

எனினும், நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த 40 வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், மார்ச் 23 தொடங்க உள்ள 12 வது ஐபிஎல் நிகழ்வின் துவக்க விழாவை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அணிகள்:

  1. சென்னை சூப்பர் கிங்ஸ்,
  2. ராஜஸ்தான் ராயல்ஸ்,
  3. மும்பை இந்தியன்ஸ்,
  4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,
  5. ராயல் சேலஞ் பெங்களூரு,
  6. கிங்ஸ் XI பஞ்சாப்,
  7. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்,
  8. டெல்லி கேபிடல்ஸ்

 

ipl
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.